கிரஹாம்பல் செய்த வீனை

கிரஹாம்பல் செய்த வீனை...!


கூக்குரலில் அழைத்தவனெல்லாம்
கூவி அழைக்கும் தூரம்
நின்றாலும் - கிரஹம்பலின்
வீனை வாசிக்கிறான்...!


தொலைத்தொடர்புகளை புதுப்பித்து
கொண்டான் - பல
புதுத்தொடர்புகள் பிறப்பித்து
கொண்டான்
செல்லும் இடமெல்லாம்
செல்லிடை - பேசி...!


எண்ணியவரை எண்ணை
அழுத்தி அழைத்துக்
கொண்டான் - எண்ணமெல்லாம்
பகிர்ந்திடவே...!


பெருஞ் செய்திகளையும்
நொடிப்பொழுதில் பகிர்ந்து
கொண்டான் - குறுஞ் செய்தி
அனுப்பி...!


கிரஹாம்பல் செய்த வீனை
பல கிரகங்களும்
பரவிக்கிடகிறதே மலிவாய்...!

கவிஞர் MSM.ஹில்மி
22/10/2016

எழுதியவர் : கவிஞர் MSM.ஹில்மி (1-Nov-16, 10:07 pm)
பார்வை : 101

மேலே