அழகின் உச்சரிப்புக்கள் ---முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவின் ஜடையில்
நிலத்தில் தவழ்ந்த
தேவதை மகளிவள்
உலகம் காணாத
அதிசய கிரகணம்
முகத்திரைக்குள்
அவள் பெளர்ணமி
தாவணி பெண்
மூச்சுக் காற்றில்
காஷ்மீர் எங்கும்
பனிமழை தூறல்
ஆயிரம் கோடி
விண்மீன்கள்
விலை பேசும்
பெண் சந்திரன்
நின் இமையழகி
சிவந்த மேகங்கள்
மின்னும் இதழில்
அல்லி பூக்களின்
கையெழுத்தில்
உந்தன் பல் வரிசை
நீ ஏந்திய பூக்கள்
காதலிக்கும் உன்
இதிகாசச் சிரிப்பில்
கண்ணாடி இதயம்
சுக்கு நூறானது
மண்ணையும்
விண்ணையும்
வாயடைக்க
செய்கிறது உன்
மைவிழி பார்வை
ஆயுதம் ஏந்தா
காதல் போரில்
உன் குறும்புகள்
சமாதான
ஒப்பந்தங்களை
கைச்சாத்துகிறது