நதியென்ன விதிகளை மாற்றிடுமா

​சுத்தம் செய்கின்றனர் நாளொன்றில்
அசுத்தம் ஆக்குவதோ அடுத்தநாளில் !
விதியென்பர் விதிகளை மீறிடுவோர்
கதியென்று கங்கையில் நீராடுவோர் !
நதியென்ன விதிகளை மாற்றிடுமா
சதிகளை முறியடித்து வென்றிடுமா !

பணியும் செய்வது பக்தியே காரணமா
பிணிகள் நீங்கிட வழியும் இதுவொன்றா !
வீதிகள் முழுதும் அசுத்தம் நிறைந்திருக்க
சாதிகள் சமூகத்தில் நச்சாய் கலந்திருக்க
நதிகள் மட்டும் முக்கியமல்ல இன்று
அகத்தின் அழுக்குகள் நீங்குவது நன்று !

பழனி குமார்

( என் தனிப்பட்டப் பார்வை )

எழுதியவர் : பழனி குமார் (3-Nov-16, 10:09 pm)
பார்வை : 162

மேலே