ஞானம் - புடம் போடப்பட்ட தங்கம்
தோற்றவர்களின்
தெளிந்த
ஞானம்
தெரியவேண்டியவர்களுக்கு
தெரியாமல்
போவதேன்!
நல்லவர்களின்
நாசூக்கான
சமிக்க்ஷைகள்
அப்பாவிகளின்
எதார்த்த மனதினுள்
எட்டுவதேயில்லை...!
தூண்டில்
புழுக்களின்
எச்சரிக்கை
மீன்களின்
காதுகளுக்கு
எப்பொழுதும்
கேட்பதேயில்லை!