எனக்கு நீ தான் உலகம்
அலைகளை எட்டி
உதைத்தாலும் அது
உன்னை வருடி
விட்டுத்தானே செல்லும்
நீ கண்டுக்கா விட்டாலும்
உன்னை மட்டுமே
உலகமாய் எண்ணி சில
உயிா்கள் வாழத்தானே செய்யும்
அவ்வகையில்,
எனக்கு நீ மட்டும் தான் உலகம்
என்னை வெறுத்தாலும் உன்
நினைவுகள் என்னுள் உலவும்