குமரி கிழவி

கரை படிந்த
பொக்கை வாயில்
வெத்திலைய கொதிப்பி வைச்சி
விரலால கட வாய
சரி செய்து
வாய்முட்டும் துப்பனிய
வார போர வழியில
துப்பி வைச்சி
தெருமுனையில் ஒரு கிழவி

பாதையில ஒரு குமரி
தலையில விறகு கட்டு
வெறும் பாதம் அடி வைத்து
வேர்வை சொட்ட
அங்க வந்தால்

குமரி கண்ட
கிழவி அங்கே
எங்கடி போரா நீயும்
அடிக்கும் வெயிலில
இந்தா குடி தண்ணி என்று
மஞ்ச பல்ல வெயிலில காட்டி
கூட்டி இழுத்தாள் அந்த குமரிய

என்ன கிழவி நானும் செய்ய
கட்டுனவனுக்கு கேன்சராம் என்று
தெருவோரம் இருக்கும் டாக்டர்
நேத்துதான் ரிபோர்ட் தந்தாரு
கட்டையில போகும் வரைக்கும்
நாம தானே அவன பார்க்கணும்
சொன்ன குமரி
சோர்ந்து இருந்தாள்

என்னடி நீ சொல்றாய்
உண்ட புருஷன் நல்லவன் தானே
அவனுக்கு இந்த நோயா

என்ன கிழவி
உனக்கு தெரியாதா
தினமும் குடிப்பான்
லீட்டர் கணக்கு கல்லு
சுருட்டு குடிப்பான்
சிகரெட் குடிப்பான்
இதற்கு மேல என்ன வேணும்
இந்த கேன்சர் வந்து தொலைய
என்று சொல்லி
குமரி அலுத்து கொண்டாள்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (4-Nov-16, 8:17 pm)
Tanglish : kumari kizhavi
பார்வை : 161

மேலே