உங்களுக்கு ஏன் அசிடிட்டி பிரச்சனை வருகிறது என்று தெரியுமா
உங்களுக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் அல்லது வயிற்று வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அசிடிட்டி வருவதைத் தடுக்க வேண்டுமானால், முதலில் அசிடிட்டி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக உணவை செரிப்பதற்கு வயிற்றில் அமிலம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் எப்போது நமது உடலில் அளவுக்கு அதிகமான அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அப்போது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி அதிகமாக உற்பத்தி செய்யப்படும் அமிலம் அப்படியே நெஞ்சில் ஏறி, எரிச்சலை உண்டாக்குவதுடன், வலியையும் ஏற்படுத்தும்.
இங்கு எந்த காரணங்களுக்கெல்லாம் அசிடிட்டி ஏற்படுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆல்கஹால்
ஆல்கஹாலை அதிகம் குடித்தால், வயிற்றுச்சுவர்கள் பாதிக்கப்பட்டு, அமில உற்பத்தியை மேன்மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் வறட்சி அதிகரித்து, அசிடிட்டியால் அவஸ்தைப்படக்கூடும்.
ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவுகள் காரம், எண்ணெய் போன்றவற்றால் ஆனது. எனவே இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், வயிற்றில் அமிலம் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, அசிடிட்டி பிரச்சனை வரக்கூடும். அளவுக்கு அதிகமாக உண்பது அளவுக்கு அதிகமாக உண்பது எப்போது வயிற்றில் அளவுக்கு அதிகமாக உணவு சேர்கிறதோ, அப்போது வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவும் அதிகரித்து, அதனால் அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் அளவாக உணவை உட்கொள்ளுங்கள்.
மன அழுத்தம்
மன அழுத்தம் ஒருவர் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தால், அதிகமாக உணவு உட்கொள்ளத் தோன்றும். இதன் விளைவாக அசிடிட்டியால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மேலும் அதிகமான மன அழுத்தம், அதை உண்டாக்கும் ஹார்மோன்களை அதிகமாக உற்பத்தி செய்து, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் வயிற்று சுவர்களைத் தாக்கி, அமில உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியை உண்டாக்கும். குறைவாக நீர் குடிப்பது குறைவாக நீர் குடிப்பது தண்ணீரை குறைவாக குடித்தால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் வறட்சி அடைந்து, அசிடிட்டி ஏற்படும். எனவே தினமும் தவறாமல் 8 டம்ளர் நீரைக் குடியுங்கள்.
காபி மற்றும் குளிர்பானங்கள்
காபி மற்றும குளிர்பானங்களில் காப்ஃபைன் அதிகமாக உள்ளது. இது உடலில் நீர்ச்சத்தைக் குறையச் செய்து, அசிடிட்டியை உண்டாக்கும். எனவே இம்மாதிரியான பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.