இறைவனை வணங்கும் முறை

இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக்கூடாது.

கைகளை தாமரை மொட்டுப் போல் குவித்து வைத்தே வணங்க வேண்டும்.

அப்போது விக்ரகத்திலிருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும்.

அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும்.

அப்போது புத்துணர்ச்சி ஏற்படும்.

பூமி சக்தி சுண்டு விரல் மூலமாகவும்,

தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும்,

அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும்,

வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும்,

ஆகாய சக்தி பெருவிரல் மூலமாகவும் நம்மை வந்தடைகிறது.

இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யும் செயல்கள் வெற்றி பெறும் என்றும்;

இதுவே இறையருள் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

அதுமட்டுமா நம் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள், பெரியோர்களை சந்திக்கும் போதும் இவ்வாறு வணக்கம் தெறிவிப்பது நம் எண்ணங்களை தூய்மைப்படுத்தும்...

"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"

"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Nov-16, 8:05 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 353

சிறந்த கட்டுரைகள்

மேலே