நிலவை மறைக்கும் துப்பட்டா

துப்பட்டாவால்
முகம் மறைத்து,
இருகரம் கொண்டு
இடைஅணைத்து,
இடைவெளியின்றி,
இளைஞனுடன்
இரு சக்கர வாகனத்தில்
பகல் பொழுதில்
பயணிக்கும்
பருவப்பெண்ணை
பார்த்ததும்
மின்னலாய்
தோன்றி மறைந்தது
காலையில்
கல்லூரிக்கு
சென்று வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
சென்ற
என் மகளின் நினைவு.