காதல் வேதியியல்

அவர்களின் பார்வை
அவர்களுக்குள் செய்த
வேதியியல் மாற்றம்
காதல்

ஊரின் பார்வை
அவர்களுக்காக செய்த
சமூகவியல் மாற்றம்
மோதல்

பெற்றோர்களின் பார்வை
அவர்களுக்கு செய்த
உயிரியல் மாற்றம்
சாதல்

வேதியியல் விதிப்படி
கடல் வற்றினாலாகும்
சின்ன உப்பா

ஜாதியியல் விதிப்படி
காதல் பற்றினால்
என்ன தப்பா ?

காதலித்தால் அவள்
தலையில் கமலம் ஏற்றுகிறான்.
மறுத்தால் அவள்
முகத்தில் அமிலம் ஊற்றுகிறான் .

சிலர் உம் என்றால்
பெண்ணோடு வரமாய் சேர்கிறான்
இல்லை என்றால்
மண்ணோடு உரமாய் சேர்கிறான்

வேதியியலும் காதலும்
ஒன்றுதான் இரண்டிலும்
ஆக்கமும் உண்டு
தாக்கமும் உண்டு
அணுவின் பிளவு
வெடிக்கிறது
காதலின் பிளவு
சிலருக்கு வேடிக்கையாகிறது

உண்மைக் காதலை பிரிக்காதீர் ...!

எழுதியவர் : குமார் (7-Nov-16, 10:38 am)
பார்வை : 884

மேலே