அன்பில் கொய்கிறாய் -கார்த்திகா அ
நிழல்கள் கொஞ்சும்
மாலையின் மயக்கத்தில்
நிலவின் தூதுவனாகிறாய் நீ
என்னை சுற்றிடும்
கனாக்களின் உலாவில்
காதல் சொல்கிறாய்
அன்பில் கொய்கிறாய் நீ
தூரக் கேட்கும்
பாடலின் வசமாகிறது
நீ பற்றிய மனது
சொல்லப்படாத உன்
சொற்களின் இருப்பில்
நிலை தடுமாறும்
நிலையில் முற்றிலும்
என்னைக் கொள்கிறாய்
எது வேண்டுமென்று
நீ கேட்கையில்
உன்னை விட்டு
வெளியே யோசிக்கத் தெரிவதேயில்லை
இந்த பித்துபிடித்த மனதிற்கு..