தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று தெரியுமா
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். இங்கு தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இரவு உணவையே 11 மணிக்கு தான் சாப்பிடுகிறோம். பின் தூங்குவதற்கு 12 மணி ஆகிறது.
இப்படி நடுராத்திரியில் தூங்க ஆரம்பித்தால், எங்கு நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது. அதுமட்டுமின்றி, நடு ராத்திரியில் தூங்கினால், மறுநாள் காலையில் எழுந்தாலும் மிகுந்த சோர்வை உணரக்கூடும்.
அதுமட்டுமின்றி, நம் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல், வேறுபல உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இங்கு நிம்மதியான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம் இதய ஆரோக்கியம் தூக்க பிரச்சனைகளை சந்திக்கும் பலருக்கு இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் வரும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் உடல் தூங்கும் போது தான் தன்னைத் தானே சரிசெய்கிறது.
அத்தகைய தூக்கம் கிடைக்காமல் போனால், இதயம், இரத்த நாளங்கள் சரிசெய்யப்படாமல் போகும். சர்க்கரை நோய் சர்க்கரை நோய் ஆய்வுகளில் 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூக்கத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுவாச மண்டல ஆரோக்கியம் சுவாச மண்டல ஆரோக்கியம் தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கி, சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
அதிலும் ஏற்கனவே நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள், சரியாக தூங்காமல் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகும். மனநலம் மனநலம் நாள்பட்ட தூக்க கோளாறுகள், மன இறுக்கம் மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும்.
ஆய்வுகளிலும் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
உடல் பருமன் உடல் பருமன் சமீபத்திய ஆய்வில் தூக்க பிரச்சனைகள் இருந்தால், கலோரிகளை அதிகமாக உட்கொள்ள வைத்து, தேவையில்லாத உடல் பருமனைப் பெறச் செய்யும்.
ஆகவே குண்டாக வேண்டாம் என நினைத்தால், சரியான அளவு தூக்கத்தை தினமும் மேற்கொள்ளுங்கள்.