கண்ணம்மா என் காதலி
உந்தன் கண்களில்
ஆயிரம் நிலவுகள் கண்டேன்
எந்தன் கயல் விழியே
காதல் கனி மொழியே
நீ சிந்தும்
மோகனப் புன்னகையில்
கயல் விழியே காந்தமாய் உன்னுள்
என்னை ஈர்த்து கொண்டாய்
என்னை உன்னிடம்
தொலைத்த பின்னே
வெறும் ஊனுடன் தான்
நான் இங்கு அலைகின்றேன்
காத்திரு வந்திடுவேன்
என்று கூறி சென்றாய் கண்ணம்மா
இன்னும் நீ வரவில்லையே
வந்திடுவாய் என்னைக்
கட்டி தழுவி முத்தங்கள்
ஆயிரம் தந்திடுவாய்
என்று காத்து காத்து
என் கால்கள் நோவுதடி
கண்களும் மங்கி போகுதடி
இன்னும் காலம் தாழ்த்தாமல்
ஓடி வந்திடுவாய் உந்தன்
அழகிய கமலமுகத்தில்
முத்தங்கள் ஆயிரம் பதித்திட
காத்திருக்கும் கதிரவன் நான்

