நட்பு

வரமாய் வந்து
வாழ்க்கை முழுதும் நின்றவள் நீ

தோழி என்று ஆயிரம் பேர்
இருந்தாலும் நினைவுக்கு வருவது
உன் முகம் தான் ...

என்னை எனக்கு
அறிமுகம் செய்தவள் நீ ...

ஆழமான அன்பின்
சுகமும்...

அது இல்லையேல்
சோகமும் ....
உணர்த்தியவள் நீ ....

பொய்க்கோபம்
கொள்வதில் உனக்கு நிகர் யாருமில்லை...

ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததில்லை...

ஒரு நிமிடம் பேச
ஒரு மணி நேரம் காத்திருப்பாய்
அந்த மரத்தடியில்....

காதலை விட இனிமையானது
நட்பு உணர்த்தியவள் நீ ...

என் இன்ப துன்பங்களில்
என் பக்கம் நின்றவள் நீ...

வாழ்க்கையின் இரகசியம்
நட்பு ...

அதிலே தான் எத்தனை
இன்பம் ....

கருவறை தோழி அல்ல நீ
கல்லறை வரை தோழி நீ

பொய்யான உறவுகள்
மத்தியில்
மெய்யாக நின்றவள்
நீ ....

எதை இழந்தாலும்
உன் நட்பு அது வேண்டும்
என்றும் என்றேன்றும்....

எழுதியவர் : கிரிஜா.தி (9-Nov-16, 12:49 pm)
Tanglish : natpu
பார்வை : 2013

மேலே