நட்பு

ஆழ்கடலில் தத்தளித்த தோணி நான்
அடைக்கலம் தந்த தீவு நீ நண்பா

நட்பின் சக்தியில் காற்றில் மிதக்கலாம்
நீர் மீது நடந்தே வரலாம்

நட்பைப் பிணைப்பது நட்புதான்
நட்பிற்கு நட்புதான் தியாகம்

நண்பனே உன்னை நான் அறிவேன்
உன் நட்பில் என்னை காண்பேன்

நம் நட்பை பிரித்திட நம்
நட்பாம் உயிர் மாய்ந்திடுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Nov-16, 12:26 pm)
Tanglish : natpu
பார்வை : 1107

மேலே