காதல் கைதி

பெண்ணே !
காற்றல்ல நான்,
தென்றலாய் வந்து
தழுவிவிட்டு பின்
புயலாய் வந்து
அலைக்கழிப்பதற்கு !

வண்டல்ல நான்
தாகமுள்ளவரை
அருந்தி விட்டு
பசியாறியவுடன்
பறந்து போக !

முகிலல்ல நான்
மழையாக வந்து
மகிழ்வித்து பின்
கானலாய் வந்து
கண்ணாமூச்சியாட !

நிலவல்ல நான்
பவுர்ணமியில்
முகம் காட்டி
அமாவாசையில்
ஓழிந்து கொள்ள !

இராவணனல்ல நான்
காமத்தினால் உன்னை
கவர்ந்து செல்ல !

உன்னையே உயிராக
நினைக்கும் ராமனடி நான் !

என்னிடமிருந்து எந்த
ராவணனும் உன்னை
சிறையெடுக்க முடியாது !
என் கவிதைகளுக்குள்
எப்போதும் நீ
சிறையிருப்பதால் .......!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (10-Nov-16, 2:48 pm)
Tanglish : kaadhal kaithi
பார்வை : 68

மேலே