தயவு செய்து படிக்கவும்

உயர் திரு பாரத பிரதமருக்கு . . .

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு
இந்திய குடிமகனாய் மிக பெரிய நன்றிகள் . . .
ஆனால் ரூ 500,1000 நோட்டுகளை அழிப்பதினால் மட்டுமே கருப்பு பணத்தையும் லஞ்சபணத்தையும் ஒழித்து விடலாம் என்ற எண்ணம் எவ்வளவு பலன் தரும் என்பதில் குழப்பம் மட்டுமே . . .

ஏதேனும் ஒரு அடையாள அட்டை காட்டி ரூ 4,000 வரை பெறலாம் என்றால் ஒவ்வொரு அடையாள அட்டையை வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி மாற்றி அதிகமாய் மாற்றி கொள்வதும் தவிர்க்க இயலாத ஒன்று இதற்கு என்ன செய்ய போகிறோம் ?

ரூபாய்களில் மட்டுமே கருப்பு பணமும் லஞ்ச பணமும் இருப்பதில்லை அதையும் கடந்து நகைகளாகவும், வீட்டு மனைகளாகவும் எப்பவோ மாறி போன விஷயங்களுக்கு, என்ன செய்ய போகிறோம் என்பதும் கேள்விகுறியே ?
சரியாக 08-11-2016 அன்று இரவு 11:59:59 மணிக்கு பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததும் அன்று இரவே நகைகளாய் மாறி போன கருப்பு பணத்திற்கு என்ன செய்வது, ஏன் அன்றைய தேதியில் பில் போட்டு பிறகு விற்பனை செய்து கொள்ள கூட வாய்ப்பு அதிகம் என்பதையும் மறந்து விட கூடாது . . .

அதிரடி நடவடிக்கைகள் யாவும் தங்களை போன்ற ஒரு அரசாங்கத்தால் மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைக்கையில் பெருமை படுகிறோம்,

அதே வேலையில் சில சாத்திய கூறுகளையும் மறந்து விட கூடாது என்பதுதான் என்போன்ற இந்தியர்களின் கருத்து

இரண்டரை லட்சத்திற்கு மேல் உள்ள செலுத்துதலுக்கு மட்டுமே கணக்கு கோர படும் என்பது ????

ஒரு குடும்பத்தின் சேமிப்பு கணக்கிற்கா ? அல்லது ஒரு மனிதனின் ஆண்டு வருமானத்திற்கா ?
இங்கே ஒரு நபருக்கே பல வங்கி கணக்குகள் உள்ளதையும் மறந்து விட இயலாது ஒவ்வொரு வங்கி கணக்குகளிலும் 2,00,000 செலுத்தி தப்பித்து கொள்ள வாய்ப்பு அதிகம் . . .
அல்லது தன் குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளில் செலுத்தி தப்பித்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்,

இவை போன்ற எல்லா சிக்கல்களுக்கும் நிறந்தர தீர்வு . . .
1.
அனைத்து வங்கி கணக்குகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும், நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளிலும் ஆதார் அட்டையை பதிவு செய்தால் யாருக்கெல்லாம் எத்தனை வங்கி கணக்குகள் இருப்பது என்பது மிக சரியாக தெரியும் என்பதில் குழப்பம் இல்லை போலி அக்கவுண்ட்களில் தான் அதிகம் சேமிக்க படுகிறது .
2.
இனி வாங்கும் ஒவ்வொரு நகைகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும், வெறும் ஆதார் நகலை அல்ல விரல் ரேகையையும் சேர்த்து இப்படி செய்தால் வருமானத்திற்கு மேல் நகை வாங்குபவர்களையும் ஓரளவு கட்டு படுத்தலாம் . . .

3.
அடுத்தது ஷேர் மார்க்கட்டில் ஈடுபடும் இந்தியர் ஒவ்வொருவரின் ஆதார் அட்டையையும் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் கள்ள பணம் தடுக்கபடும் என்பதும் நிதர்சனம்.

4.
இனி செலுத்த படும் ஒவ்வொரு மின்கட்டணம், குடிநீர்வரி, சொத்துவரி, உள்ளிட்டவற்றிற்கும், ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்ய பட்டுள்ள வீடு நிலம், போன்றவற்றிற்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உண்மையில் யாருக்கெவ்வளவு சொத்து என்பதை உண்மையாக கண்டு கொள்ள முடியும்.

இதெல்லாம் சாத்தியமா ?

ஒரே ஒரு விடைதான் ஜியோ சிம்மிற்கே ஆதார் எண்ணையும் நம் விரல் ரேகையும் வைத்தால் நமது முழு விவரமே வருகிறது

ஒரு சிம்கார்டுக்கே இவ்வளவு சாத்தியமானால் அத்தியாவசிய நடவடிக்கைக்கு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை என்பது நிதர்சனமான உண்மை
நம் நாட்டின் வளர்ச்சியில் அக்கரை உள்ள அனைவரும் தயவு செய்து மற்றவர்களுக்கு பகிருங்கள், இரண்டு நாட்களாய் கையில் பணம் இருந்தும் சாப்பிட முடியாமல், பேருந்தில் செல்ல முடியாமல், குழந்தைக்கு பால் வாங்க முடியாமல், தவித்த தவிர்ப்பிற்கான தியாகம் மேற்சொன்ன விஷயங்களினால் மட்டுமே சாத்தியம்.

நாம் பகிர்ந்தால் என்னவாகும் என்று என்ன வேண்டாம், நிச்சயம் அதிக பகிர்தல்கள் அதிகாரிகளை படிக்க வைக்கும்.

இப்படிக்கு,
ந.சத்யா
(இந்திய குடிமகன்)

எழுதியவர் : ந.சத்யா (10-Nov-16, 3:15 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 472

மேலே