கார் நாற்பது 6 - நெடுவிடைச்1 சென்றாரை நீடன்மி னென்று - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்1
சென்றாரை நீடன்மி னென்று! 6

பொருளுரை:

மாவடுவின் நடுவே பிளந்தாற்போலும் பரந்த கண்களை யுடையாய்! கடுமையாய் இடிக்கும் முகில் நெடிய வழியிற் சென்ற தலைவரை காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி முழங்கா நிற்கும்; ஆதலால், வளையிடுதற்கு நிரம்பாவாய் மெலிந்த தோள்களைப் பார்த்து வருந்தாதே!

தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; 1.நெறியிடை - என்றும் பாடம்!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (21-Aug-25, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே