திருநங்கை

கடவுள் தன் கலைத்திறனை நிரூபிக்க
கண்களை மூடிக்கொண்டு ஒரு சிற்பம் செய்தான்
அழகிய ஆணாக உருவம் பெற்றிருந்த
சிற்பத்திற்கு உயிரும் கொடுத்தான்
உணர்வுகளை கொடுக்கும் போது மட்டும்
இறைவன் உறங்கிவிட்டான் போல
ஆணாக படைக்க பட்டவனுக்கு
பெண்ணின் உணர்வுகளை கொடுத்துவிட்டான்
படைத்தவன் செய்த பிழையால்
நாங்கள் படைப்பின் பிழையாகிவிட்டோம் .....

எழுதியவர் : மோனிஷா.A (10-Nov-16, 3:44 pm)
பார்வை : 58

மேலே