ரோஜா
நண்பா
உன் மனதை பறித்து
சென்ற அவளுக்காக
என்னை பறித்து
செல்கிறாய்!!!,
இதயமற்ற அவளுக்காக
என் இதயத்தை
பறிக்கிறாய்,
இரக்கமற்ற அவளுக்காக
என் இதழை
பறிக்கிறாய்,
காதல் வாசம்
உணராத அவளுக்காக
வாசம் வீசும் என்னை
பறிக்கிறாய்,
உன்னை
கண்ணீர் சிந்த வைக்கும்
அவளுக்காக
பன்னீர் சிந்தும் என்னை
பறிக்கிறாய்,
நன்பா
உன் காதல்
வாழ்வதற்க்கும் சாவதற்க்கும்
இடையில் என்னை எதற்காக
பறிக்கிறாய்?!!
உணர்வும் உயிரும்
உன்னிடம் மட்டுமே
இல்லை
என்னிடமும் இருக்கின்றது,
ஒர் உயிரின்உணர்வை
மதிக்க தெரியாத "நீ"
ஒர் உள்ளத்தை
கேட்பது சரியில்லை,
முதலில்
உயிர்களின் உணர்வை
நேசிக்க கற்றுக் கொள்
பிறகு
உள்ளத்தை கேட்க
கற்றுக்கொள்...!!!!
இப்படிக்கு
"ரோஜா"