பெண் குழந்தைகள் வரமே

பொதுவா குழந்தைகள் நிறைஞ்ச வீடே ஒரு நிறைவான தருணங்களே உருவாக்கும் !!! குழந்தைகளோட அழுகையாகட்டும் , சிரிப்பாகட்டும் நம்ம மனநிலைய மாத்துகிற மன நிலைமை அவங்க கிட்ட தான் இருக்கு .... எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவனோட வாழ்க்கைய தீர்மானிக்கறது கட்டாயம் அம்மாவே தான் !!!
கைக்குழந்தைய வச்சிருவக்கங்களுக்கு பொதுவா இரவு தூக்கம் எட்டாக்கனி தான்,
கண்ணை மூடினா போதும் குழந்த அழ ஆரம்பிச்சிடும் ,
அடுத்து குழந்தை தத்த ஆரம்பிச்சா வீட்ல ஒரு பொருள் வைக்க முடியாது நடக்க நடவண்டி பழக்கி விட்டதும் போதும் ஒடு ராஜா ஒடு மாதிரி ஒடிக்கிட்டே இருக்க வேண்டியது தான் இதுனாலையே வீட்ல ஒரு தூண்ல பிடிச்சு கட்டி வச்சிடுவாங்க
வேலைக்கு போற பெண்கள் எல்லாம் குழந்தைய கவனிச்சுட்டும் வேலைக்கு ஒடுவாங்க , பள்ளிக் கூட ஹோம் வொர்க் , டிப்பன் , லஞ்ச், டின்னர் இதெல்லாம் பாத்துட்டு குழந்தைக்கு ஆராரே சொல்லி தூங்க வைக்கறதுல தான் வரமே அடங்கியிருக்கு ...
பெரும்பாலான இந்தியத் திருமணங்கள் விவாகரத்திலிருந்து தப்பிப்பதற்கு காரணம் குழந்தைகளாகவே இருக்குது ,,
குழந்தைகள் அனைவரும் கடவுள்னா பெண் குழந்தைகள் எல்லாமே கடவுளுக்கும் மேல் ஐ லவ் பெண் குழந்தைங்க !!!
கிராமத்துல வீட்ல பிறக்குற பெண்பிள்ளைய அவங்க வீட்டு குலசாமியாவே பாக்கறாங்க !!!
குழந்தைகள் அனைவரும் வரமே அதுல பெண்குழந்தைகள் கூடுதல் வரமே குழந்தைகளை போற்றுங்கள் உங்கள் சந்ததி வளரட்டும்
பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கெல்லாம் இந்த பிறவியில் தேவதையின் கடவுளாகும் வாய்ப்பு கிடைத்திருக்குறது

எழுதியவர் : க.நாகராணி (14-Nov-16, 10:41 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 727

மேலே