பாலைவனப் பறவைகள்

பணி நிமித்தம் தன் பெண்டு பிற்ளைகளை விட்டு அயல்நாடுகளில் வாழும் எம் முகநூல் நட்புகளுக்கு சமர்ப்பணம் ....

பாலைவனப் பறவைகள்.....

கண்ணுக்கப்பால் பல காதம் கடந்து காதோரம்
ஒரு குரல்வளையின் அதிர்வு...
பேரின்ம அலையில் பேசா மடத்தையின் பேரீச்ச மதுர மொழி
தொலைவுகள் கடந்து அவன் உணர்வுகளைப் பற்ற வைத்தது....

இன்ப மிரட்சியில்
இதயம் அவளை வாரி அணைக்கிறது....
இதழ்கள் முத்தமழைப் பொழிய கட்டுக்கடங்காமல் துடிக்கிறது
காந்த அலைகளை கைப்பேசி
உணர்பெருக்கி அவளிடம் கடத்துகிறது....

ஓராயிரம் வார்த்தைகள் பேச
உள்ளத்து உப்பரிகையில் தேங்கிக் கிடக்க
ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து உளரித் தீர்த்தான்...
மறுமுனையில் மையளாலின் நலம் விழுந்த நயனம்....
பாலைநிலத்திடை பயணித்தவர்க்கு பருகிட இளநீராய்....
வறண்ட நாவை குளிர்த்தது

மன்றாடி மறுநொடி மனம் உருவாய் அவள் அருகில்...
ஒரு சில நிமிடங்களே அந்த இன்ப மலர்ச்சி
ஒருயுகம் வாழ்ந்தது போல் உணர்ச்சி...
உச்சந்தலைவரை ஊடுருவி ஏறிய கிளர்ச்சி....
மிச்ச நாட்களை கழிக்க அதுவே அலர்ச்சி

வாலிபத்தை விரைத்து
வளம் தேடி அலைகின்றான்...
வசந்தங்களை களைத்து
வனாந்திர வாழ்விற்குள் தொலைகிறான்

இழப்புகளை அறியாமலே
கடக்கின்றது காலம் மடக்குக் கணினியில்
நடக்கிறது வாழ்க்கை
வருடும் வெறும் கைப்பேசி வார்த்தைகளால்......

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (15-Nov-16, 8:02 pm)
பார்வை : 73

மேலே