பச்சை குத்திட்டாவது பணம் குடுங்க

இன்னும் அழியாத அடையாள மை வரல. இன்னிக்கு யாருக்கும் பணம் தரமுடியாது. எல்லாம் போயிட்டு நாளைக்கு வாங்க.

நாளைக்கோ அல்லது இன்னும் ஒரு வாரத்துக்குள்ள மை வந்தாலும் வரலாம்.

@@@@@@@@@@@@

அய்யா என்னோட கல்யாணத்துக்கு இன்னும் ரண்டு நாள் தான் இருக்குதுங்க. என்னோட அம்மா அப்பா ரண்டு பேருமே ரொம்ப

வயசானவங்க. வங்கிக்கு வந்து அவுங்களால மணிக்கணக்கில நிக்கற அளவுக்கு அவுங்களால முடியாதுங்கய்யா.

இன்னிக்கு நா பணம் எடுத்தாத் தான் என்னோட கலயாணம் நடக்கும்.

எங்க அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணுங்க. கூடப் பொறந்த அண்ணந் தம்பிங்க கெடையாதுங்க. நா பச்ச குத்தறவரை

கூட்டிட்டு வந்திருக்கறங்க. பச்சை குத்திட்டாவது எனக்குப் பணம் குடுங்க. என்னோட ஆதார் அட்டையைக் கொண்டு

வந்திருக்கறேன். என்ன பணம் வாங்கிட்டு வரச்சொல்லி என் அப்பா கடிதம் எழுதிக் கொடுத்து அவரோட அடையாள

அட்டையையும் குடுத்திருக்காருங்க. எங்கப்பா வீட்ல சேமிச்சி வச்சிருந்த என்னோட சம்பளம், அப்பாவோட பென்சன் பணம் ரண்டு

(1௦௦௦ ரூபாய் நோட்டு 1௦௦, 5௦௦ ரூபாய் நோட்டு 2௦௦) லட்சம் பழைய ரூபாய் நோட்ட மாத்தத்தான் வந்திருக்கறேனுங்க. நானும் ஒரு

வாரமா நடையா நடந்து வங்கிக்குள்ளயே நொழைய முடியலீங்க. நாங் கடன் கேக்க வரலீங்க.

@@@@@@

பச்சை குத்திட்டெல்லாம் பழைய நோட்டுக்கு பதிலா புதிய நோட்டை உடனே குடுக்க முடியாது. நீ கொண்டு வந்த ரண்டு

லட்சத்தையும் டெபாசிட் பண்ணிட்டு வீட்டுக்குப் போ. நாளைக்கு வாம்மா. முடிஞ்சா புது நோட்டுகள தர முயற்சிக்கிறோம்

நாளைக்குப் பாக்கலாம்.

எழுதியவர் : மலர் (16-Nov-16, 2:00 pm)
பார்வை : 236

சிறந்த நகைச்சுவைகள்

மேலே