சின்ன சின்ன பூக்கள்

சிறகுகள் விரிக்கத்தான் ஆசை
எப்போதும் முடிந்ததில்லை
எப்போதாவது முடியுமா என
ஏங்கியே தவிக்கிறேன்
என் கனவுகளுக்கு ஒரு வடிகால்
இல்லை இல்லை கனவுகளே
எனக்கு வடிகாலாய்..

;
;
;இருவகை காதல்
எப்போதும் இங்குண்டு
ஒருவகை காதல்
உயிரை கேட்க்கும்
மறுவகை காதல்
உடலை கேட்க்கும்
இழப்பு என்னவோ
அதிகம் ஆண்களுக்குத்தான் ..
இந்த காதலில் .......


;
;
;மறுக்க முடியாமல்
மறக்க முடியாமல்
ஆழ புதைக்கிறேன்
என் முதல் காதலை
இப்படிக்கு மனசாட்சி

எழுதியவர் : ருத்ரன் (16-Nov-16, 7:41 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : sinna sinna pookal
பார்வை : 147

மேலே