தனலட்சுமி

தனலட்சுமி ...
உனக்காகத்தான் - இங்கே
சிறியவர் முதல் பெரியவர் வரை
வரிசையில் காத்திருக்கிறார்கள் .

உன் வரவிற்காக
எனது நேரம்
செலவாகிக்கொண்டிருக்கிறது .

நீ
இதயத்தை களவாடாமல்
எனது நேரத்தையல்லவா
களவாடிச் செல்கிறாய்.

உன் புதிய வரவில்
புன்னகை சில்லறைகளை
அள்ளி வீசி வா
நாங்கள்
கட்டுப்பாட்டை இழப்பதற்குள் . 

எழுதியவர் : (16-Nov-16, 8:37 pm)
பார்வை : 81

மேலே