காதல்
போட்டி இல்லா
தேர்வு பெற்ற
பிரபஞ்ச அழகி -நீ
கருமேகமாய் கூந்தல்
உன் மதிமுகம்
மறைக்கும் பிறர்கண்
பட்டுவிட கூடாதென
நாணலும் நலுங்கா
உன் நடைகண்டு
அனுதினம் நடை
பயிலும் அன்னமும்
ஆற்றோடு போகும்
இல்லை போல
உன்னோடு போகும்
என் எண்ணமும்
ஊன் உருக்கும்
உந்தன் அழகை
கவியில் வைக்கிறேன்
உயிர் உருக்கும்
உந்தன் அன்பை
உயிரில் வைக்கிறேன்