என்னவன் - சகி
என்னவனே...
உனக்கான என்
நொடிகள் நமக்கான
நம் காதல் நொடிகள் ....
தனிமையில் என்னை
ஆட்சி செய்யும் நம்
ஊடலின் நினைவுகள் ....
உன் மடிசாய்ந்து
என் துக்கம்
அனைத்தும் மறந்தேன் ....
ஆறுதலாய் தலைசாய்த்ததேன்
அரவணைத்தாய் என்
தாயாக அன்பில் ...
உன்னிடம் நான்
வைக்கும் அன்பு கோரிக்கை
உன் அன்புக்கு
மட்டுமே இவள் இதயம்
துடிக்கிறது .....
காயம் தருகிறாய்
வார்த்தைகளால் ....
துடிக்கும் இதயம்
நீ குடியிருக்கும்
என்னில் துடிக்கும்
நம் காதல் இதயம்
என்பதை உணர்ந்துக்கொள்
என்னாலனே....

