இறைவனை வேண்டுவோம்! 

இறைவனை வேண்டுவோம்! 
×××××××××××××××××××××××××××××

உவந்து செய்யும் அன்னையும் 
உணர்ந்து செய்யும் தந்தையும் 
மாட்சி செய்யும் மனைவியும் 
மாண்பு செய்யும் குழந்தையும் 

தியாகம் செய்யும் அண்ணனும் 
துணிந்து செய்யும் தம்பியும் 
விரும்பிச் செய்யும் தமக்கையும் 
விரைந்துச் செய்யும் தங்கையும் 

உயர்வு செய்யும் அறிவும் 
சேவை செய்யும் மனமும் 
ஒன்று கூடும் சுற்றமும் 
ஒன்றி இணையும் நட்பும் 

இசைவாய் நிறைவாய் அமைந்தே 
இனிதாய் வாழ்ந்து மகிழவே 
இதயம் மலர்ந்து துதித்தே 
இறைவனை நாளும் வேண்டுவோம்! 

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (17-Nov-16, 12:03 pm)
பார்வை : 105

மேலே