ஏனுடைத்தாய் என் மனக்குடத்தை

ஏனுடைத்தாய் என் மனக்குடத்தை
**ஏன்தாயே எனைப் பெற்றெடுத்தாய் !
சிந்துகிறது சிந்தையும் குருதியை
**சிதைந்த உள்ளமும் சிதறுகிறது !
ஏனிந்த நிலையென வருந்துகிறது
**ஏங்கிடும் நெஞ்சமும் அழுகிறது !
சீர்குலைகிறது சமுதாயம் பலவழியில்
** சீரழிகிறது வளரும் தலைமுறையும் !
வன்முறையே செய்முறையாய் ஆனது
**வஞ்சகமே வழிமுறையாய் மாறுகிறது !
உள்ளத்தில் கலக்கிறது கள்ளத்தனம்
**உள்ளங்கள் பதுக்குகிறது கறுப்புப்பணம் !
ஒருதலைக் காதலெனும் ஒவ்வாமையால்
**ஓருயிரை சாய்க்கிறது பொல்லாதவரால் !
காமவெறியுடன் அலைகின்ற கயவர்களால்
**கருக்களை கலைக்கின்ற நிலையிங்கே !
ஒருபிடிச் சோற்றுக்கேத் திருடும்நிலை
**ஒருவழியும் பிறக்காத வறியோர்நிலை !
விடம்கலந்த பால்தான் இனிஉதவிடுமா
**விளைந்திட்டக் கேடுகள் மறைந்திடுமா !
பாழடைந்த சமுதாயமும் திருந்திடுமா
**பாழும்மனம் அழுகிறதே எந்நேரமும் !
கேடுகெட்ட அரசியலும் மாறிடுமா
**பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் வீணாகுமோ !
ஏனுடையாது மனக்குடமும் இந்நிலையில் ?
(மறைந்திட்ட என் தாயிடம் முறையிட்டேன் இவ்வாறு ...
.வேறென்ன செய்ய முடியும் ? )
பழனி குமார்