ஞாயிறும் உதித்திடுமே

வெண்மதி வானில் முகிலினுள் மறைந்து
****விரும்பியே விளையாடும் !
எண்ணிலா விண்மீன் தோழிய ருடனே
****இனிமையாய்க் கதைபேசும் !
மண்ணுள குளத்தில் தன்முகம் பார்த்து
****மகிழ்ச்சியில் களித்திருக்கும் !
நண்பனின் வரவில் நழுவிட மெல்ல
****ஞாயிறும் உதித்திடுமே !

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Nov-16, 3:09 pm)
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே