நிலவே நீயன்றோ
நிலவே நின் அழகில்
நித்தம் நித்தம் நாங்கள்
நிசப்தத்தில் நிம்மதியில்
நிலவெனும் ஒளியால்
நிறைகின்ற உலகில்
நிரப்புகின்றாய் தண்ணொளியை
நீ சிந்தும் வெளிச்சமெல்லாம்
நிம்மதியைத் தந்து செல்லும்
நிலவே நீ வள்ளலன்றோ
நினைப் போற்றும் நெஞ்சமெல்லாம்
நீயாவாய் தாலாட்டும் தாயாவாய்
நிலவே வெண்ணிலவே தண்ணொளியே
நினைப் பாடும் பாடலினால்
நிதம் தூங்கும் எம் பிள்ளை
நீயாக தாயாக நிதம் வருவாய்
நிலவே நீயன்றோ வரமன்றோ
நின் வரவே கொடையன்றோ
நில்லாது நில்லாது நின்னொளியே