வைரமுத்துக்காக .......
உன் கவிதையை படித்துக்கொண்டே உறங்கியதும் உண்டு....
உன் கவிதையை படித்ததாலே
உறங்கியதும் உண்டு .....
எதற்குத்தான் கவிதை எழுதவில்லை நீ ...
தாய்மை பற்றி எழுதினாய்
தவித்து போனேன்....
காதல் பற்றி காவியம் பாடினாய்
கனத்து போனேன்.....
கண்ணகிக்கு முகவரி தந்தாய்
கலங்கி நின்றேன்.....
உன் கவிதையை நேசிப்பவர் பலருண்டு.....
உன் கவிதையை சுவாசிப்பவள் நானாகட்டும்.....
இன்னொரு ஜென்மம் எனும் போது உன் வைரவரிகளுக்கு ஒரு வார்த்தையாகும்
வரம் வேண்டும்.....
பக்கங்களை நிரப்பி போனவரெல்லாம் கவிஞரல்ல........
உன் போல் இதய பக்கங்களை நிரப்ப வேண்டும்.....
என் போல் உன் கவிதையில் இதயம் நிரம்பியவர் எத்தனை பேரோ......