யாருமற்றவர்களுக்காக
அன்பு காட்ட அன்பானவர்களும் இல்லை
ஆனாலும் ஏங்கவில்லை
ஆறுதல் சொல்ல ஆதரவானவர்களும் இல்லை
ஆனாலும் வலிக்கவில்லை
ஆசைப்படாத பொருளும் இல்லை
ஆனாலும் கேட்கவில்லை
எனது தேவையெல்லாம்
அன்பான வார்த்தையும்
ஆதரவான தோள்களும் தான்
என்றாவது கிடைக்கும்
நம்பிக்கை தானே வாழ்க்கை