அனைவரும் சலாம் போட்ட - கலாம்

விருதுகளை எருதுகளாய் கருதியவனே
இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தவனே
உறுதியில் உடும்பாய் உலாவந்த நீ
இறந்த சேதி இந்திய தேசத்தையே
கண்ணீரால் அல்ல; குருதியையே சுண்டவைத்துவிட்டது !
ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி பதவியென்பது
வெறும் டம்மி பீஸாக பார்க்கப்பட்டது- கலாமே
நீ பதவி வகித்தப்போதுதான் ஜனாதிபதி பதவி
கும்மியடித்து ஆராதிக்கப்பட்டது !
உனக்குத் தெரிந்ததெல்லாம்
நன்நடத்தையில் தூய்மை
பொதுவாழ்வில் நேர்மை
அணுஆய்வில் கூர்மை
ஆட்சிப்பணியில் எளிமை
இறுதிவரை கணவனாகாத கனவுக் கணவானே
இறைவனின் நிழலில் நிம்மதியாய் இளைப்பாரு !
இஸ்லாமியரின் பிறையில் தெரியும் விண்மீனாய்
உன்னைத்தொழுது உயிர்வாழ்வோம் !
உன் பெயரைச்சொல்லி மரம் நடுவோம் –
ஆளுக்கொன்றாக! மீண்டும் நீ ஆண்டவனின் உயிர்ப்பாக.

எழுதியவர் : சாய்மாறன் (19-Nov-16, 11:13 am)
பார்வை : 62

மேலே