நிலவு தரையிரங்கியது

உன் கரு கரு விழிகளினால்
காற்றில் வைத்த கற்பூரமாய்
கரைந்தே போகின்றேன் ....

உன் பார்வை தான் வீசி
இன்று பிறந்த பூக்களின் ஆயுள்
கூட காண்கிறேன் ....

உன் உதட்டின் ரேகை
வைத்து உலகின் ஜோசியம்
காண போகிறேன் .....

உன் காதில் ஆடும்
ஜிமிக்கைகளிடம்
புது கவிதைகவிதை வாசிக்க போகிறேன் ...

உன் சேலை வண்ணம் வாங்கி
பூமிக்கு வானவில் ஒன்று
நெய்ய போகிறேன் ....

உன் முகத்தை படம்
பிடித்து நாசாவிற்கு
அனுப்ப போகிறேன்
நிலவு தரையிரங்கியது என்று ....

கவியுடன்,
கிரிஜா.தி

எழுதியவர் : கிரிஜா.தி (19-Nov-16, 1:47 pm)
பார்வை : 248

மேலே