நானும் உயிர்தான்
நானும் உயிர்தான்
ஊமையாய் நான் இருந்தால்
உயிரில்லாதவன் என்று கூறிவிட
முடியுமா...?
பச்சை பச்சையாய்
நான் இலைகள் கொண்டு
நிழல்கள் தருகிறேன்
உங்களுக்கு
ஏன் இதை மதிக்காமல்
என்னை மிதிக்கின்றீர்கள்...?
காலை எழுந்ததும்
களைப்புகளை நீக்க
நோயற்ற காய்களை தருகிறேன்
ஏன் என்னை நோகடிக்கின்றார்கள்...?
காலங்கள் பல
கடக்க என்னை
படகாய் பயன்படுத்திய
காலங்களும்
என்மீது
பாசம் கொண்டு
என்னை வாழ வைத்தது அன்று.
பாவம் எனத் தெரிந்து
பாவி நீ
என்னை சிதைப்பதன்
காரணம் என்ன..?
உலகத்தை கண்டறியும்
முன்பு
என்னை தொட்டு
உணர்ந்திருப்பாய் உன்
அன்னை வடிவில்..?
வயது போனாலூம்
உயர்வான வலிகளை
தருகிறேன்
இன்று.
எனக்கு மட்டும் ஏன்
வலிகளை மட்டும் தருகின்றீர்கள்..?
நானும் ஓர்
உயிர்தான்
உயிர் இருந்தும்
உல்லாசமாய் திரியாமல் உண்மையாய்
உழைக்கின்றேன்
உங்களுக்காய்..
என்று புரியும் நானும்
ஓர் உயிர் என்று
அன்றாவது துன்புறுத்தாமல்
இருங்கள்..............?????
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை