எனக்கும் சில ஆசைகள்
உன்னருகே வந்து உள்ளம் திறந்து,
இறுக்கமான கவலைகளை கற்கொண்டு உடைத்து,
உன்னிடம் சொல்லி அழ வேண்டும்!
அதற்கு ஆறுதல் நீபல கூறி,
அன்பான முறையில் யோசனை தரவேண்டும்,
என்கவலைளை நானறுக்க கவிகள்நீ பலபாடவேண்டும்!
ஓவியம் நான் வரைந்து உம்மை
போற்ற வேண்டும் என்பத ரிதம்மா,
காவியம் ஒன்று நான் படைத்து,
உன்னை தலைவியாக போற்றுவேன் பாரம்மா!
பொருட் கோடி தரயியலா தெனினும்,
கண் கோடி உம்மை பாதுகாப்பேன்!
அன்பாலே பூச்சூடி கவியாலே அழங்கரிப்பேன்!
அனுமதியுடன் கைப்பற்றி அனுதினமும் அரங்கேற்றுவேன்!
-மு.விக்னேஷ்