இரவின்​ மடியில் ​


​ஊரார் உறங்கிடும் இரவது
உள்ளம் விழிக்கும் வேளை !
மோகம்​ பிறக்கும் வேகமுடன்
அணைக்கத்​ தூண்டும் அன்புடன் !

கனவில்​ நினைப்பாள் காதலியும்
காதல் பொங்கிட காதலனையும் !
நினைவில் நடக்கும் ​நிச்சயமாக
கணவன்​ மனைவியின் தழுவலும் !

கட்டிபிடிப்பாள் தாயோ சேயையும்
கனிவுடன் கண்மணியை பாசமுடன் !​
கவிஞர்கள்​ பற்றிடுவர் கற்பனைகளை
கவிதைகள் வடித்திட அமைதியுடன் !

பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (19-Nov-16, 2:58 pm)
பார்வை : 240

மேலே