பிரிவு பிரிவல்ல

ஆறும் கூட வழிவிடும் - உனக்கு
பாறை கூட வணங்கிடும்!
வாழ்வில் ஏது நிரந்தரம்? உன்
பாரம் கூட குறைந்திடும்!

அழுது அழுது தொலைத்துவிடு - உன்
காயம் எல்லாம் அழித்துவிடு!
போதும் போதும் சென்றுவிடு - இனி
மனமே! மறக்க பழகிவிடு!

பாலை போல மனிதனே - ஓ
உடம்பில் இருந்தால் தூய்மையே!
உடலைவிட்டு வெளிவந்தால் - அது
தண்ணீர் கலந்த பொய்மையே!

எல்லாம் இங்கே கலப்பிடமே - இதன்
உள்ளம் ஒன்றே பிறப்பிடமே!
யாரின் வலியை யாறிவார்? - காதலன்
வலியோ காதலி அறிவாள்!

மனதை தேத்த பழகிக்கொள் - இனி
நடப்பதை தினமும் ரசித்துக்கொள்!
வாழ்வை கூட புரிந்துகொள் - பிரிந்த
காதலை எண்ணியும் அழுதுக்கொள்!

காதல் செய்த தாமரையே - நாம்
உடலால் பிரிவது உண்மையாச்சு!
உயிரை பிரிக்க வந்ததனால் - அந்த
மரணம்கூட இறந்து போச்சு!


எழுதியவர் : (19-Nov-16, 2:29 pm)
பார்வை : 138

மேலே