உலக பொருளாதார புரட்சி

>>>>>>>>>>>>>>>>>>>>>>உலக பொருளாதார புரட்சி>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
---------------------------------------- --------------------------------------------------------------------------

நவம்பர் மாதம் 8 ம் திகதி இரவு 8 மணிக்கு உலக பொருளாதார புரட்சி நடைபெற்றது
இந்திய பிரதமர் அவர்கள் உலகமே வியக்கும் ,நம்பாத பிறரால் முடியாத . இந்த பெரிய ஜனநாயக நாட்டில் 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார திடடத்தை
அறிவித்தார் .500 மற்றும் 1000 ரூபாக்கள் செல்லாது என்ற புரசிகர திடடம் .என்னை பொறுத்தவரை
ஒரு புரட்சிதான் . புரட்சி என்றால் என்ன ...? வழமையான செயல் பாடுகளை ஒருமுறை புரட்டி போடுவதாகும் . விவசாய யுகம் கைத்தொழில் மயமாகியது "கைத்தொழில் புரட்சி " அரச நிர்வாகம்
இராணுவமயமாக்குவது " இராணுவ புரட்சி" கருப்பு பணம் வெள்ளையாக மாறும் இந்த நிகழ்வை
நான் புரட்சி என்று சொல்வதில் என்ன தப்புண்டு ....?

1 ) சிலர் கேட்கலாம் உள்நாட்டில் இருக்கும் பணம் வெள்ளை பணமாக மாறி விடலாம் .வெளிநாட்டில்
இருக்கும் பணம் .போகப்போகும் பணம் எப்படி வெள்ளையாகும் ..? என்று இப்போது தான் விளங்கியது
இந்திய பிரதமர் எதற்காக அடிக்கடி வெளிநாடு சென்றார் என்று இதை அவரே கோவாவில் பேசிய
உரையில் தெளிவாக சொல்லியிருக்கிறார் . எனவே இனி யாருடைய காத்தலும் கெஞ்சலும் சரிவராது .


2 ) முதல் ஒரு கட்டுரையில் சொன்னேன் .இந்த திட்டத்தை வரும் காலத்தில் உலகில் பல நாடுகள்
பின்பற்றும் என்று .அண்மையில் உலக நாடுகள் பல இந்திய பிரதமரை வாழ்த்திவருவது அவர்கள் நாட்டிலும் வரப்போகிறது என்பதை எடுத்து காட்டுகிறது .

3 ) மடியில் கணம் இருப்பவர்கள் இதை விமர்சிப்பார்கள் . சாமானிய மக்களை சாட்டி தம்மை
பாதுகாக்க முற்படுவர் . இதையெல்லாம் புரியாதவர் அல்ல இந்திய பிரதமர் . அது அவசரப்பட்டு
எடுத்த திட்டம் இல்லை ஆழ அகல ஆராயாமல் இந்த பெரிய நாட்டில் செய்ய முடியுமா ....?

4 ) காந்தியின் சுதந்திர போராடடத்தில் ஒரு சிலர் பங்கு கொள்ளவில்லை . அவர்கள் சுதந்திரம்
கிடைத்தபின் வெட்கப்பட்டு சிலர் தற்கொலை செய்ததாக வாசித்தேன் .அதே போல் இந்த திடடத்தை
சுயநலத்துக்காக எதிர்ப்பவர்கள் நிசசயம் தலை குனிய நேரிடும் .

5 ) சாமானிய மக்கள் இந்த திட்டத்தை 100 சதவீதம் ஏற்கிறார்கள் . கருப்பு பண கைக்கூலிகள் தான்
இத் திடடம் நல்லது என்று தெரிந்தும் அலட்டி கொள்கிறார்கள் . எதுவுமே அவர்களுக்கு சரிவராது .
இந்த உலக பொருளாதார புரட்சி வெல்லும் .வென்று விட்டது .

&
பொருளியல் கண்ணோட்டத்தில்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Nov-16, 3:55 pm)
பார்வை : 381

மேலே