நிழலே உன்னை ஆராதிக்கிறேன்

நிழலே உன்னை ஆராதிக்கிறேன்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
உருவத்தின் மிளிர் அழகை
உள்வாங்கி
உயிர்த் துடிப்பு குன்றாது
நிலைத்திருக்கும்
நிழலே நீ எனக்கு
துணையானாய்
நிழலே உன்னை நான்
ஆராதிக்கிறேன்
நிழல் நிலைத் திருக்குது
நிஜம் மறைந்து போனது!
நிழல் சுகத்தை கூட்டுது
நிஜம் நினைவை வாட்டுது!
நிழல் சிரிப்பு காட்டுது
நிஜம் வெறுமை கூட்டுது!
நிழலே நீ எனக்கு துணையானாய்
நிழலே உன்னை ஆராதிக்கிறேன்