நட்டநடு வீதியிலே

எண்ணற்ற ஏழைகளை
ஏக்கபெரு மூச்சினிலே கரையவே விட்டார்கள்!
விண்ணளவு பணம்சேர்த்த
வரிகட்டா பணம்படைத்தோர் தரையிலே விட்டார்கள்!

கள்ளத்தனம் செய்தேதான்
கடலளவு சேர்த்தோர்கள் நிம்மதியாய் உறங்குகிறார்கள்!
உள்ளத்துள் வஞ்சமிலா
உழைக்கின்ற கூட்டமெலாம் நிம்மதியை தொலையவிட்டார்கள்

நூற்றுக்கே அல்லாடி
நாற்றையே நடுகின்றோர் கண்ணீரை விடுகின்றார்!
ஆற்றிலே கொட்டிவிட்டு
அடுத்தவேளை பார்ப்பவரோ தண்ணீராய் செலவிடுகின்றார் !

குளிர்சாதன அறையிலே
கூட்டம்தான் போட்டுவிட்டு அறிவித்திட்டார் !
எளியஏழை மக்கள்தாம்
இன்னலுக்கு ஆளாகி அவதியே படுகின்றார் !

நாட்டுக்கே நலம்பயக்குமென
நா-நயத்தால் அறிக்கை விட்டார் நாட்டிலே!
நோட்டுக்கே அலைந்துதான்
நட்டுநடு வீதியிலே பித்தாக மக்கள்தானே !

---கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Nov-16, 8:52 pm)
பார்வை : 98

மேலே