காகிதப் பூவே - நீயென் காதல் பூ

அருகிருந்து மணக்காவிடினும்
வாடாமல் இவள் வாழ்வில்
என்றும் மலர்ந்திருக்கும்
காகிதப் பூ நீ!!!..

இரண்டு நாள் வாசம் தந்து
இருந்த இடம் தெரியாமல்
கருகிப்போகும் மலரிலும்
போற்றுதற்குரிய - என் வாழ்வின்
காகிதப் பூ நீ!!!..

தலைமேல் சூடிக்கொள்ள
வகை வகையான மலரிருந்தும்
இவள் தலை சுமந்து கொண்டாடும்
காகிதப் பூ நீ!!!...

மணமேடை அலங்கரித்து
மணவறையில் அமரும் வரம்
மறுக்கப்பட்ட சாபம் பெற்ற
என் காகிதப் பூ நீ!!!..

ரசித்துக்கொண்டேயிருப்பேன்
வாழ்வு முற்றுப்பெறும் வரையிலும்...
நான் விடைபெற்று போன பின்பும்
மலர்ந்து கொண்டேயிருக்கும்
என் காதல் பூ - நீ!!!

எழுதியவர் : கவிபி பிரியை shah (19-Nov-16, 4:31 pm)
பார்வை : 531

சிறந்த கவிதைகள்

மேலே