பொக்கிஷம்
உன்னை விட்டு பிரிந்த நாளிலிருந்து என்னுள் பல கேள்விகள் அத்தனையும் உன்னைப் பற்றியும் உன் கடிதத்தின் சாயலில் ஒட்டியிருக்கும் என்னைப் பற்றியும் தான்....
அருகிலிருந்த போதெல்லாம் மறைத்துவிட்டேனடி என் இன்பம் துன்பம் எல்லாம் உன்னைப் பார்த்து ரசிக்கும் நிமிடம் வரை மட்டும் என்று....
எப்படி சொல்லி போவதென்று நீயும் மறைத்துவிட்டாய்
விளையாட்டாக நான் வெட்ட மறுத்த உன் பரிசுகளுக்கும், கடிதங்களுக்கெல்லாம் இப்பொழுது பதில் காத்திருக்கிறது என் பெட்டிக்குள் பொக்கிஷமாய்
.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!