தோற்றாலும் வெல்வோம்

எம்குருதி மக்களினம் எங்குள்ள போதினிலும்
நம்குருதி என்றே நலமுணர்ந்து - தங்குபுகழ்க்(கு)
கென்றே தமிழரினம் வாழ்ந்திடுவோம்; தரணியை
வென்றே உயிர்போம் விரைந்து!

பார்பரந்து வாழும்தமிழ் பண்பாட்டுக் கீடுண்டொ
சீர்மறந்து செம்மைகுன்றி வாழ்தனினும் - ஊர்மறந்து
கார்முகிலாயோடி கடுமின்னல்தண லாய்சூழுந்து
போர்புரிந்து வெல்வோம் புகழ்!

வெட்டவெட்ட கன்றினும் வாழையென மீண்டெழுவோம்
பட்டுவிட்ட துயரங்களில் பங்கெடுப்போம் - பெட்டையெனும்
சிங்களனை வெல்வோம் சீறியெழு, செந்தமிழா
மங்களமாய் வாழ்வோம் மகிழ்ந்து!


கலிங்கத்தை வென்ற குலோத்துங்கன் போரினிலே
முழங்கிவிட்ட சத்தங்கள் முழங்கட்டும் - இலங்கையிலே
காளிகளும் பேய்களும்போய் களக்கட்டும்; நாம் வெல்லும்
வேளைவரும் கலங்காதே, வெல்!

செங்குருதி சிந்தியதும் சிந்தணலில் மாண்டதுவும்
இங்கதனை யார்மறப்பர் எம்நாட்டில் - சிங்களனை
வேரறுத்து வென்றிடுவோம் வேல்மறவர் நாங்களின்று
நீரிலே பூத்த நெருப்பு!

இரவழிக்கும் பகலவனாய் என்றும்எழு, நின்று
பகையழிக்கும் தமிழாஉன் தாளறிந்து - சிறகுவிரி
ஏற்றமுடன் ஒலியெழுப்பு, ஏனிந்த மலைப்புனக்கு

தோற்றாலும் வெல்வோம் துணிந்து!

எழுதியவர் : கவிஞர் ப.ச.சன்னாசி (22-Nov-16, 12:54 pm)
பார்வை : 379

மேலே