திருநங்கை
நான் கருவிலிலிருந்து
கண் திறக்கும் முன்
என் அம்மாவுக்கோ
ஆண்குழந்தை மேல் விருப்பம்
அப்பாவிற்க்கோ
பெண் குழந்தை மேல் விருப்பம்
நான் புதுமலராய்
புவியில் பிரசவிக்கப்பட்டபின்
ஆண் குழந்தை கேட்ட
அம்மாவிற்கும்
என்னை பிடிக்கவில்லை ...
பெண் குழந்தை கேட்ட
அப்பாவிற்கும்
என்னை பிடிக்கவில்லை ...
காரணம்
பாரபட்சமில்லாத இறைவன்
படைத்துவிட்டான் ...
என்னை இரண்டும் கலந்தவனா(ளா)க ....