தீக்குள் மொட்டு

​பெண்ணாய் பிறத்தல் பெருமை என்றும்
கண்ணாய் வளர்த்தல் கடமை என்பதும் ​
​நன்னெறிக் கொண்ட நல்லவர் கூறியது
முன்னேறி செல்லும் இன்றளவும் நன்றே !

​வன்முறை ஆனது வாடிக்கை இந்நாளில்
​நன்முறை ​என்பதும் வழிமுறை மாறியது !
இழைக்கும் கொடுமை எல்லையும் மீறுது
பெண்மைக்கு இன்று பங்கமாய் ஆகுது !

கருவில் வளரும் உருவைத் தவிர்த்து
கற்பைக் கெடுக்கும் கயவர் கூட்டமோ
கூடுது நாளும் விளையுது கேடுகளும்
கூசுது விரித்துக் கூறிடவும் எவருக்கும் !

அச்சமுடன் உலவும் நிலையே பெண்ணுக்கு
அலுவல் இடத்திலும் கவலை அவளுக்கும் !
பயணம் செய்தாலும் பயமே அதிகரிக்குது
பாலியல் பிரச்சினை பரவுது பாரெங்கும் !

நாளிதழில் காண்கிறோம் நாளும் ஒன்று
ஊடகங்கள் கூறுவதும் ஊருக்கு ஒன்றாய் !
கலியுகக் காலத்தில் புலியாய் மாறினாலும்
தீக்குள் மொட்டாய் கருகுகிறாள் பெண்ணும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Nov-16, 9:26 pm)
பார்வை : 309

மேலே