காதல் பறவை நான்
நான் சுதந்திரமாய்
பறந்துவரும் வானம்பாடி
காதல் பயணம் நாடிடும்
காதல் பறவை
எனக்கு யார் ஜோடி
என்று தேடுகின்றேன்
நீ யார் என்று நானறியேன்
உன் பார்வையை என் மீது
செலுத்துகின்றாய்
எனக்கேனோ உன் மீது
காதல் வரவில்லை
அதை எப்படி உனக்கு
சொல்வதென்றும் தெரியவில்லை
உன்னிடம் எனக்கு ஓர் வேண்டுகோள்
வீணே என்னை சுற்றி சுற்றி
வேட்டையாடும் வேடுவன் போல்
வந்திடவேண்டாம்
நீ நான் தேடும் காதல் பறவை அல்ல
என்னை என் போக்கில் விட்டு விடு
வீணே வம்பு செய்து
என் வாழ்க்கை உன் வாழ்க்கை
இரண்டிற்கும் நோவு தராதே
நான் நீ தேடும் ஜோடி அல்ல
சுதந்திரமாய் சுற்றி வரும்
வானம்பாடி ,எனக்கோர் காதலனை
தேடி பறக்கும் காதல் பறவை !