மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாமா ம்ம்

மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாமா ம்ம்
=========================================

இப்போதும் நீண்ட கழுத்துடைய அதே முகம்தானே உன்னுடையது ம்ம்
நான் மெலிஞ்சு உணங்கி எலும்பும் தோலுமாய் கிடக்கிறேன்
இந்த அவஸ்த்தையில் என்னை கண்டால்
யாருக்கும் சங்கடம் தோன்றும்
நீ எப்படி இருக்கிறாய்
உனக்கென்ன
உன் அம்மா செய்துத் தந்த இனிப்பையெல்லாம்
தின்று தின்று
தடித்துக் கொழுத்து அழகாகவே இருப்பாய்
பிரியப்பட்டவளே
நீ எப்படி இருந்தால்தான் என்ன
எனக்குப் பிடிக்கும்
நிறைய நிறைய நிறைய பிடிக்கும்
ஹேய் என்னாச்சு
ஏன் பேசமாட்டேங்குற
ஏன் இந்த நீள் மௌனம் ம்ம்
உன்னுடைய இந்த
திடீர் இடம் மாற்றம் போலும்
உன் தோழிகளைக் காணான் அல்ல
என்று எனக்குத் தெரியும்
ஆனால் இங்கே வந்து
நீ என்னைக்குறித்து அறிந்தபோது
மனதில் கொண்டு நடந்த உன் கனவுகளெல்லாம்
வெறுதே ஆயிற்று
என்று தோன்றியிருக்கலாம் அப்படித்தானே
இந்த பூமியில்
உன் கால்கள்
அச்சு வைத்த அந்த நாள் முதல்
ஒருமித்து கைப்பிடித்த நடைகளினூடே
பிரிந்தபோது
கடுலாசு கத்துகளினூடே
நீயும் நானும்
எப்போதும் சொல்லிடாத கனவுகளினூடே
அடிவரிகள் எழுதி
கைய்யொப்பமிட்டு
எனக்காய் அனுப்பி தந்துட்டுள்ள
புஸ்த்தகங்களினூடே
நிறைய நிறைய நாம் தெரிந்துகொண்டவர்கள் தானே
நான் எத்திச் சேர்ந்த இடங்களையும்
ஆகித்தீர்ந்த அவஸ்த்தைகளையும் காணும்போது
நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் முதலிலிருந்து
தொடங்கலாம் என்று தோன்றுகிறதா உனக்கு ம்ம்
வாழ்க்கை ஒருமுறை தானே
எல்லாம் நடப்பதுபோல நடக்கட்டும்
சொல் மீண்டும் எப்போது சந்திக்கலாம் நாம்
நீ ஆக்கிரகிக்கும் போது
உன் அருகில்
எப்போதும் இருந்ததில்லைதான் நான்
இனியாவது இருக்கப் பார்க்கிறேன் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Nov-16, 3:32 am)
பார்வை : 173

மேலே