கலி விருத்தம் வயம்சூழ் வயமீதி னில்முத லில்பயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
பயணம்
கலி விருத்தம் ..
வயம்சூழ் வயமீதி னில்முத லில்பயணம்
விண்ணிலு மில்லையே மண்ணிலும் மில்லையே
பண்டு புகுந்ததோர் விந்தில் பயணம்என்
அன்னை வயிற்றினில் ஐயிரு திங்கள்
ஒருநாள் விரைந்தேன் உலகினைக் காண
அறியா வயதில் தொடங்கும் பயணம்
ஒருநாள் முடியும் எரித்தால் மிதந்திடு
விண்ணில் புதைத்தால் கிடந்திடு மண்ணில்
22-11-2016